இயற்கை தரும் இளமை வரம் சப்போட்டா பழம்!!

 

உடலுக்கு அதிக ஆற்றலை தரும் சப்போட்டா பழம்இறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் ஆகும். `சிக்கு’ என்ற பெயர் நம்மில் பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். 
 
சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே `சிக்கு’ என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பல தரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். 
 
இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இப்போது சப்போட்டாவின் பல்வேறு சுகாதார நலன்கள் பற்றிப் பார்ப்போமா.  Continue reading

பெருத்த லாபம் தரும் பெரு நெல்லி + சப்போட்டா கூட்டணி


நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன்.“கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு முழுக்க நெல் விவசாயம்தான.கட்டுபடியான விலையில்லை, வேலையாட்கள் பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்சனை.அதனால் கொஞ்சம் இடத்தில் தென்னை, வாழையை சாகுபடி செய்தோம்.எங்கள் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிற பகுதி. அதனால் வாழை மரங்கள் சரிந்து பெருந்தொல்லையாக இருந்தது.அந்த சமயத்தில்தான் தற்செயலாக பெருநெல்லி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அதுதொடர்பானத்தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்த நான்,உடனடியா சாகுபடியிலும் இறங்கிவிட்டேன். Continue reading

நன்மைகள் நிறைந்த சப்போட்டா


இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமாணத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. கண்பார்வையை அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும். Continue reading

இளமைக்கு இளமை சப்போட்டா..

சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி இவற்றைப் போக்கும்.
சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும் Continue reading