ஜவ்வாது மலை

 

வ்வாதுமலை. வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த மலையின் மேற்கு பகுதியில் மனதுக்கு குளிச்சி தரும் ஏலகிரிமலை உள்ளது என்றால் கிழக்கு பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி, வரலாற்று தகவல்கள், பொது அறிவுத்தகவல்கள் புதைந்துள்ள ஒர் சுற்றுலா தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது என்றால் அது மிகையில்லை. 

Continue reading

மும்பையில் ஒரு கேரளா – மலபார் ஹில்

IMG_17285957662299மலபார் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது தென்னைமரங்கள்,  இயற்கை கொஞ்சும் கடற்கரையுடன் இணையும் மலையடிவாரங்கள், மற்றும் பசுமை போன்ற அழகிய காட்சிகள், இவை அனைத்தும் கூட நெரிசல் மிகுந்த மும்பையிலும் கிடைக்கும் இடம் மலபார் ஹில். மும்பையில் மேற்கு கடற்கரை ஓரபகுதியில் இயற்கை கொஞ்சும் இந்த கடலுடன் இணையும் சிறிய பசுமை வழியும் மலையை கண்டதும் போர்ச்சுகீஸியர் வைத்த பெயர் மலபார் ஹில். மலபார் ஹில் என பெயர் பெருவதற்கு முன்பு இந்த மலையில் வால்கேஸ்வர் என்ற சைன மத கோவில் இருந்ததால் இது வால்கேஸ்வர் என்று இன்றும் பரவலாக அழைக்கப்படும் . ஆனால் இதன் அடையாள பெயர் மலபார் ஹில்.  பிரபல எஞ்சீன் ஆயில் நிறுவனமான‌ “castrol” ஆரம்பகால தலைமை அலுவலகம் இங்கு இருந்த வெயிட் ஹௌவ்ஸ் என்ற க‌ட்டிடத்தில் தான் செயல் பட்டது. வெயிட் ஹவுஸ¤ம் மும்பை மக்களிடம் மிகவும் பிபலமான ஒரு பெயராகும்.. பங்கன்ஹாரா டேங்க் போன்றவையும் மலபார் ஹில்லில் மிகவும் பிரபலமான இடம் ஆகும்.Continue reading

பயணம் வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்….

 தேவாலயம் ஹோட்டல், பெல்ஜியம்

பயணம் என்பதே மறக்க முடியாத ஒன்று, அதில் முக்கிய இடம் வகிப்பது என்பது நாம் தங்கும் இடம்.  எனது ப்ளாக்கை விரும்பி படிக்கும் நண்பர் ராஜேஷ் அவர்கள் எப்போதும் நான் செல்லும் இடங்கள் பற்றி எழுதும்போது, தங்கிய ஹோட்டல் பற்றியும் எழுதலாமே என்பார், அவருக்காகவே இந்த பதிவு ! ஒவ்வொரு பயணத்தின் போதும் பல நாட்களை செலவழித்து தங்கும் இடத்தினை தேர்ந்தெடுப்பேன், இதனால் மனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் அந்த பயணத்தில் கிடைக்கும். சிலர், கிடைக்கும் இடத்தில் தங்கி செல்வர்…. அது ஒரு வகையான பயண அனுபவம். இப்படி நான் சமீபத்தில் செய்த பயணத்தில் நான் தங்கிய ஹோட்டல் என்பது ஒரு தேவாலயம் !! மிகுந்த ஆச்சர்யம் கொடுத்த இடம் அது !
ஜீசஸ்….. இதுதான் ஹோட்டல் !

Continue reading

ஒரு இன்பச் சுற்றுலா

கோலாலம்பூரிலிருந்து சுமார் மூன்று மணிநேரப் பயணத்திற்குப்பின் பாலித் (BALI) தீவை அடைந்தோம். இது இந்தோனீசியாவிலுள்ள 18,300 தீவுகளில் ஒன்று. நாங்கள் சென்ற விமானம் கடலைத் தொடுவதுபோல
அவ்வளவு கீழே பறக்க, ஒரு நீலப் புடவைக்கு வெள்ளிச் சரிகைக்கரை அமைந்ததுபோல கடற்கரையோரம் அலை பளபளத்தது. கடலைத் தாண்டியவுடனேயே விமானம் தரையில் இறங்கியது. Continue reading

கேரளாவின் மலைவாசஸ்தலங்கள்!

கேரளாவின் அறியப்படாத அற்புத மலைவாசஸ்தலங்கள்!

கேரளாவின் தொன்னலம் வாய்ந்த அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. தேக்கடி அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும் பயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதோடு கேரளாவில் வாகமன், பொன்முடி, பீர்மேடு என்று எக்கச்சக்கமான மலைவாசஸ்தலங்கள் உங்கள் வரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

கொடைக்கானல் – மலைகளின் இளவரசி

இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Click to enlarge map

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம். Continue reading

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்


நீலகிரி

மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் மலைத் தொடர்ச்சி தான் நீலகிரி. நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால்,’நீலகிரி’ என அழைக்கப்படுகிறது.மலைகளின் அரசியான ஊட்டி சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கிறது.உடலை வருடும் இதமான தென்றல், பச்சைப்பசலென நீண்ட நெடிய அரிய வகை மரங்கள், அதனை சுற்றி படர்ந்துள்ள செடி, கொடிகள் இவையெல்லாம் Continue reading

மாமல்லபுரம் – Mamallapuram

இந்த பதிவில் சுற்றுலாப் பயணியும், வழிகாட்டியும் பேசிக்கொள்வது போல் உங்களுக்கு மாமல்லபுரத்தைப் பற்றி கூறப் போகிறேன்.  இனி அவர்கள் பேச்சை கவனிப்போம்.


வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா? Continue reading

குற்றால அருவிகள் – kutralam falls

குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பல உயிர்களை பலிவாங்கும் அருவி என பல உண்டு.  இப்படி எவ்ளோ நாளைக்குத்தான் நினைத்துக் கொண்டே இருப்பது, போய் இதெயெல்லாம் எப்போது அனுபவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். அப்படிபட்ட குற்றால அருவியைப் பற்றி இன்று பார்க்கலாம். Continue reading