நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது: உலக சுகாதார நிறுவனம்..

Photo: நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது: உலக சுகாதார நிறுவனம்.. ஜெனீவா, மே. 1– உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இனி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வேலை செய்யாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததை விட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இனி பயன்படுத்தினால் அதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே சூப்பர்சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. டாக்டர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். மாலைமலர்

ஜெனீவா, மே. 1–உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் இனி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வேலை செய்யாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததை விட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இனி பயன்படுத்தினால் அதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே சூப்பர்சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

டாக்டர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாலைமலர்

Continue reading

மேற்கத்திய மருந்துகள்


சுஷில் குமார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.) என்னுடன் வேலை பார்த்தவர். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார். ராம்தேவ் சொல்லாதது, சில சமயம் சுரைக்காய் சாறு விஷமாக ஆகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் நண்பர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது. அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவ முறைகளின் மீது எவ்வளவு மாளாத, அறிவுபூர்வமற்ற பற்று கொண்டுள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது. Continue reading

பயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள்

வேப்பிலை, சோற்றுக் கற்றாழை

கடலூர் : இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. Continue reading