முள்ளங்கி மகத்துவம்

ஈரப்பதம் மிகுந்து, கொழுப்பு, புரதசத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, பாஸ்பரஸ், கால்சியம், ஆகிய சத்துக்கள் மிகுந்த முள்ளங்கியின் பூர்வீகம் ஆப்பிரிக்கா.
காடுகளில் மானாவாரியாகப் புதைந்துகிடந்த முள்ளங்கியைக் கண்டு, அதன் மகத்துவம் அறிந்து ஆப்பிரிக்கப் பழங்குடிகள்தான் மனிதர்களின் உணவாக மாற்றினர்.
குதிரைமுள்ளங்கி, காட்டுமுள்ளங்கி, மலைமுள்ளங்கி என பலவகைகள் உண்டு. நாம் சாப்பிடுவது மலைமுள்ளங்கி. வெண்முள்ளங்கியைவிட மருத்துவ குணம் அதிகமுள்ளது சிவப்பு முள்ளங்கிதான்.

Continue reading

சிறுநீரகக் கோளாறின் எதிரி! – முள்ளங்கி

null
முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும்.

கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும். விதை காமத்தைப் பெருக்கும். பொதுவாக கிழங்குகளை இரவில் உண்பது உடலுக்கு நல்லது கிடையாது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணக் கூடாது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றது. Continue reading

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை. Continue reading

முள்ளங்கி


முள்ளங்கி:கருச்சிதவைத் தடுக்க –
ஆண்மை சிறப்பாகச் செயல்பட.

காய்கறிகளை சமையலுக்குத் தேர்வு செய்யும்போது, எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாகவும் எங்கும்கிடைக்கக் கூடியதாகவும், சத்துக்கள்நிறைந்ததாகவும் விலை மலிவானதாகவும் உள்ளதைத் தேர்ந்தெடுத்து, அன்றாடம் பயன்படுத்துவதே சிறப்பானதாகும்.இக்காய்களில் மருத்துவக் குணம் நிறைந்தவற்றைப் பார்த்து வாங்கினால், பல நன்மைகளை அடைய முடியும். அவ்வாறு தேர்வுசெய்ததில் ஒன்றுதான் முள்ளங்கி.

இந்த முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகியவற்றில்மருத்துவ குணங்களும்; உடலைப் பாதுகாக்கும் சத்துப்பொருள்களும் அடங்கியுள்ளன.
முள்ளங்கியில், சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கி வெப்ப வீரியமும் கார்ப்புச் சுவையும் கொண்டதாகும்.

மருத்துவ குணங்கள்: முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கிதான் மருத்துவகுணங்கள் அதிகம் உடையதாகும். முள்ளங்கியில் புரதம், கொழுப்பு, மணிச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன.
உயிர்ச்சத்துக்களான, கரோட்டிண், பி.1,ரிபோபிளேவின், நியாசின், சி. வைட்டமின்களும், மெக்னீஷியம், செம்பு, மேங்கனீஸ், ஜின்க், குரோமியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.

என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?

முள்ளங்கியைத் தினமும் சாப்பிடலாம். உணவு நல்ல முறையில் செரிமானம்ஆக உதவுகிற.து குடலில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கிறது குடல் சம்மந்தமான அனைத்துக் கோளாறுகளயும் போக்குகிறது.

மூலக் கடுப்பிற்குச் சிறந்த நிவாரணமளிக்கிறது வயிற்று வலியைக் குணப்படுத்கிறது. வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குணமாக்குகிறது. இருமல், கபம்,ஜலதோஷம், தலைவலி, பல்நோய்கள் நிவர்த்தியாகிறது குன்மம் சுவாசம், குடல்விருத்தி நோய், வாதநோய் கரப்பான் நோய் நீங்க பெரிதும் பயன்படுகிறது.

விந்து உற்பத்திக்கு: கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள்; இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறவதை உணர முடியும்.

உணவில் முள்ளங்கியைச் சமைத்துச் சாப்பிடுவதால் கண்களுக்குத் தெளிவான பார்வை கிடைக்கிறது ஆண்களின் விந்து கூடுதலாக உற்பத்தியாகிறது.

பிஞ்சு முள்ளங்கியை வாங்கிச் சுத்தம் செய்து சாறு தயாரித்துச் சாப்பிட்டுவந்தால், நீர்க் கடுப்பு நீங்கும்.குடற் புண்கள் நிவர்த்தியாகும். பிஞ்சு முள்ளங்கியில் அயோடின், சிலிக்கான் ஆகியவை சேர்வதற்கு மிகவும் பயனுள்ளதாகும்.

கருச்சிதவைத் தடுக்க:
அடிக்கடி கருச்சிதைவுக்கு உள்ளாகும் பெண்கள் முள்ளங்கிச் சாறு 100 மில்லியில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கருப்பை பலம்பெற்றுக் கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.

முள்ளங்கிச் சாற்றைச் சாப்பிடுவதால் மூட்டு வலி குறைகிறது. எலும்புச்சிதைவு ஏற்படாமல் பாகாக்கிறது.

பொடுகு நீங்க: முள்ளங்கிச்சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து தலைக்குத் தேய்த்து வைத்திருநது, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கும். குளிக்கும்போது, பேன்கள் வெளியேறி விடும்.

உணவு செரிமானத்திற்கு:முள்ளங்கி விதையை இதன் எடைக்கு எட்டுப் பங்குத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உணவை மிக விரவில் செரிமானமாக்க உதவும்.

தாது விருத்திக்கு: முள்ளங்கி விதையை நன்கு பொடித்து வைத்துக் கொண்டு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்துக் குழைத்துச்சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்குச் சக்தியளித்து ஆண்மை சிறப்பாகச் செயல்படும். போக சக்தி நீடிக்கும். முள்ளங்கி விதையப் பொடி செய்து கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் தாது விருத்தி அதிகமாகும்.

முள்ளங்கி விதையப் பொடி செய்து சம அளவு கற்கண்டு சேர்த்து காலை, மாலை கால் கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால், சுக்கில இழப்பு சரிசெய்யப்பட்டு, தாது விருத்திக் கூடுதலாகும்.

முள்ளங்கி விதைய ஒரு தேக்கரண்டியளவு தூள் செய்து தண்ணீரில் கலந்துகாலல, மாலை குடித்து வந்தால் கடுமையான வெடi;டநோய் குணமாகும்.மருநது; சாப்பிடும்போது பேதி அதிகமானால், மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீர்ப் பையில் அழற்சியும் சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு உள்ளவர்கள் முள்ளங்கிச் சாறு100 மில்லியளவு தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சிறுநீர் தாராளமாகவும் எரிச்சல் இல்லாமலும் பிரியும். மேகநோய் தொடர்பான உடல் காங்கை தீரும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்த: பிஞ்சு முள்ளங்கியைத் தேங்காய் திருகுவது போல் திருகி, நிழலில் உலர்த்தி பொடித்து, இதில் தேவையான அளவுநெய், தேன், கற்கண்டு சேர்தது; லேகிய பதத்தில் தயாரித்து வைத்துக் கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவுநோய் கட்டுப்படும்.

முள்ளங்கி விதையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டு வந்தால் குடல்வாதம் நீங்கும்.