மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்

gallerye_010424168_1189811தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading

வீட்டிலேயே இயற்கை விவசாயம்

மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உலகமோ மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களைச் செய்வது, பூமி சீர்கெடும் விகிதத்தை குறைக்க உதவும்.

Continue reading

விவசாயிகளுக்கான தொழில்நுட்ப சாதனம்?!

விவசாயிகள் மின்சார தட்டுபாடு, காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, விலைச்சலுக்கெற்ப விலைநிர்ணயம் இன்மை மற்றும் இடைதரகர்கள் போன்ற பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
அவற்றில் இயற்கை சார்ந்த விடயங்களை பொருத்தவரை ஒன்றும் செய்ய இயலாத நிலை தான். ஆனால் இயற்கை அல்லாத சில இன்னல்களை களைய அரசாங்கமும் மற்றவர்களும் முன்வரவேண்டும். அதில் குறிப்பிடும்படியான பிரதான பிரச்சனையாக மின்தட்டுபாடு உள்ளது. Continue reading

வெட்டிவேர் – ஒரு வெற்றி வேர்

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத் தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். Continue reading

நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..

ஏக்கருக்கு 42 மரங்கள். இடுபொருட்களே தேவையில்லை.

களையெடுக்கும் கால்நடைகள்.

காவேரிராஜபுரம்… அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் Continue reading

வெற்றிக் கதைகள்-3

மின்சாரம் இல்லாமலே இயங்கும் காய்கறி குளிர் சாதனக் கலன்!

காய்கறி மற்றும் பழங்களை அதிக நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, மின்சாரம் இருந்தால் மட்டும்தான் இயங்கும். ஆனால், மின்சாரம் இல்லாமலே காய்கறி மற்றும் பழங்களை கூடுதல் நாட்கள் வரை பாதுகாக்கும் காய்கறி சேமிப்புக் கலன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேண்ட் அக்ரிகல்ச்சர்’ (கிரிடா) என்ற நிறுவனம்தான் இதை அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் (வேளாண் பல்கலைக் கழகத்தின் அங்கம்) அந்தக் கலன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. Continue reading

வெற்றிக் கதைகள்-2

வாழைக்கு இடையில் வருமானம்…. 55 நாளில் அள்ளிக் கொடுக்கும் மல்லி!

ஊடுபயிர் ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு ‘அடுத்த வேளை’ என்பது கனவாகவே போயிருக்கும். வறட்சி, ஆள்பற்றாக்குறை, நோய்த் தாக்குதல் விலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான். Continue reading

வெற்றிக் கதைகள்

தேனிச்சம்பா.. வருமானத்துல சீனிச்சம்பா..

தேனிச் சம்பாவை 30 வருஷமா விடாமப் பயிர் பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் ஈரோடு மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லக்குமாரபாளையம் விவசாயி தங்கமுத்து. Continue reading

விளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”

”தமிழ்நாடு அருமையான விவசாய பூமி. அந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரியான உணவுப் பழக்கத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல், சம்பந்தமே இல்லாத பயிர்களையெல்லாம் விளைவிக்க முயற்சிப்பது, அதையும் ரசாயன அடிப்படையில செய்வது என்று தடம் மாறி போய்க் கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள்.
விளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”
=====================================

‘மதிப்புக்கூட்டும்’ ஓர் ஆதர்ச தம்பதி!

”ஆத்திரம்-அவசரத்துக்கு ஓடி வர அக்கம்பக்கம் ஆட்கள் யாரும் கிடையாது; மின்சாரம், தொலைபேசி கிடையாது; திரும்பிய பக்கமெல்லாம் வெறும் பாறை, புதர் இவை மட்டும்தான். இப்படிப்பட்ட பகுதியில் இந்த இடத்தை நாங்கள் வாங்கியபோது… எங்களைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். ‘உங்களுக்கு ஏதும் கிறுக்கு பிடித்துவிட்டதா?’ என்று நேரடியாகவே சிலர் கேட்டார்கள். ஆனால், ‘இந்த மண்ணை மாற்ற முடியும்… இங்கே வாழ முடியும்’ என்று என் மனைவி ஜூலி உறுதியாக நம்பினாள். Continue reading