வெற்றிக் கதைகள்-11(விவசாயம்)

 

பாடு இல்லாமல் பலன் கொடுக்கும்  பாக்கு…
செயற்கையில் ரூ.4,200 இயற்கையில் ரூ.7,500
ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர்வளம், தட்பவெப்ப நிலை… ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும். Continue reading

வெற்றிக் கதைகள்-10(விவசாயம்)

 

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை, பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில் தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் , பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற இவர் தற்பொழுது முழுநேர விவசாயி. Continue reading

வெற்றிக் கதைகள்-8 (விவசாயம்)

ஒரு தார் 1,000 ரூபாய்

சுற்று வட்டார வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் ‘பெரிய வாழைத்தார்’ என்று ஆரம்பித்தாலே போதும், ‘சுந்தரம் தோப்பில் விளைந்ததைதானே சொல்கிறீர்கள் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம். Continue reading

வெற்றிக் கதைகள்-7 (விவசாயம்)

மா சாகுபடி … கன்றில் கவனம் வைத்தால், கடைசி வரை லாபம்தான்!

25.4.12

மா சாகுபடிக்கு மணல் கலந்த செம்மண் ஏற்றது. புதிதாக மா கன்றுகளை நடவு செய்யும் போது ரகங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். நல்ல விலை கிடைக்கும் என்று ஏதாவது ஒரு வெளி மாநில ரகத்தை வாங்கி விடக் கூடாது. நமது பகுதியில் நல்ல விலை கிடைக்கும் ரகங்கள், அதே சமயத்தில் அதிக விளைச்சல் கொடுக்கும் ரகங்கள் என்று தேர்வு செய்து நடவேண்டும். Continue reading

வெற்றிக் கதைகள்-5 (விவசாயம்)

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

 

 

இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த  சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. Continue reading

வெற்றிக் கதைகள்-4(விவசாயம்)

மாடித் தோட்டத்தில் ஒரு மகத்தான மகசூல்!

ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை, வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். Continue reading

வெற்றிக் கதைகள்-3(விவசாயம்)

மகத்தான மகசூல் கொடுக்கும் ‘மருந்து வெங்காயம்’

 

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்த ‘பெல்லாரி’ வெங்காயத்தைத் தொடர்நது தற்போது வேகமாக பரவி வருகிறது ‘மருந்து வெங்காயம்’ எனப்படும் ‘ரோஸ் வெங்காயம்’ கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்த வகை வெங்காயம், முழுக்க முழுக்க ஏற்றுமதிக்காக மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. Continue reading

வெற்றிக் கதைகள்-3

மின்சாரம் இல்லாமலே இயங்கும் காய்கறி குளிர் சாதனக் கலன்!

காய்கறி மற்றும் பழங்களை அதிக நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, மின்சாரம் இருந்தால் மட்டும்தான் இயங்கும். ஆனால், மின்சாரம் இல்லாமலே காய்கறி மற்றும் பழங்களை கூடுதல் நாட்கள் வரை பாதுகாக்கும் காய்கறி சேமிப்புக் கலன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேண்ட் அக்ரிகல்ச்சர்’ (கிரிடா) என்ற நிறுவனம்தான் இதை அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் (வேளாண் பல்கலைக் கழகத்தின் அங்கம்) அந்தக் கலன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. Continue reading

வெற்றிக் கதைகள்-2

வாழைக்கு இடையில் வருமானம்…. 55 நாளில் அள்ளிக் கொடுக்கும் மல்லி!

ஊடுபயிர் ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு ‘அடுத்த வேளை’ என்பது கனவாகவே போயிருக்கும். வறட்சி, ஆள்பற்றாக்குறை, நோய்த் தாக்குதல் விலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான். Continue reading