ஹஜ் உம்ரா விளக்கம்_9

 

#பிறருக்காக_ஹஜ்_செய்தல்

IMG_1411377046383ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார். ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும்போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்_7

IMG_1997236256772#தவாபுல்_விதஃ

மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.  Continue reading

ஹஜ்ஜின் ஒழுங்குமுறை

 

ஹஜ் கடமையாக்கப்பட்டவர்களும் அதன் சிறப்புகளும்

IMG_760743902739727 ”உம்ராவானது, மறு உம்ரா வரையிலான பாவங்களின் பரிகாரமாகும். பாவங்கள் கலக்காத ஹஜ்ஜுடைய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

Continue reading

ஹஜ்_உம்ரா_விளக்கம்_4

IMG_3484191246579ஸபா_மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது

தவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்-1

#உம்ரா_ஹஜ்_விளக்கம் #பகுதி -1

ஹஜ்ஜின் சிறப்புகள் 

IMG_3673929481086ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

Continue reading

திருப்புமுனையாகும் புனிதப் பயணம்!


ஊரை மறந்து, உற்றார் உறவினரை மறந்து, தொழிலை மறந்து, பொருளை மறந்து, இலட்சக்கணக்கானோர் மத்தியில் இருந்தாலும் அனைவரையும் மறந்து ஏக இறைவனின் அன்புக்காக ஏங்கவைக்கும் ஏற்றமிகு நாட்களே ஹஜ் நாட்கள்.

இறைமறை இறங்கிய இடம்; இறைத்தூதர் பிறந்த மண். அந்த இடம் புனிதம்; அந்தக் காற்று புனிதம்; அந்த வான்வெளி புனிதம்; அந்த மாதம் புனிதம்; அந்த நாள் புனிதம்; அந்த மண், நீர், மரம், செடி கொடி, காய்கனி, பேரீச்சங்கனி, குப்ஸ் (கோதுமை ரொட்டி), ஒட்டகம், தோட்டம், வயல்வெளி… எதையும் மறக்க முடியாது. Continue reading

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன. அவர்கள் செய்த பல தியாகங்க ள் இன்று நமக்கு ஹஜ்ஜின் கடமையான வணக்கமாக்கப்பட்டிருக்கின்றன. Continue reading

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்..

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. Continue reading

உம்ரா செய்யும் முறை

 

உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புஹாரி 1773) Continue reading

ஹஜ்ஜின் சட்டமும் சிறப்பும்

ஹஜ், முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். இது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் அதற்கு (செல் வதற்கு)ரிய பாதையில் பயணம் செய் யச் சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும். (3 : 97) Continue reading

தியாகத்தின் பயணம்

மக்கமா நகரில் உள்ள இறைவனின் இல்லத்தை தரிசனம் செய்வது இணையில்லாத ஒரு அனுபவத்தை எமக்குத் தருகின்றது. படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம் ஹஜ் ஆகும். ஹஜ் கடமைகள் யாவும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தை நினைவு படுத்துவதோடு அவர் ஏக இறைக்கொள்கைக்காக செய்த தியாகங்களையும் நினைவுபடுத்துகின்றது. Continue reading

ஹாஜியார்? தியாகத்திற்கு தயாராகுங்கள்


நபி (ஸல்) அவர்கள் இடத்தில் ஹாஜி என்பவர் யார் எனக் கேட்டபோது எவரது தலைமுடிகள் கலைந்து சிதறியதாகவும் அவரது உடை புழுதி படிந்ததாகவும் காணப்படுகிறதோ அவர்தான் ஹாஜி எனப் பதிலளித்தார். (அல் ஹஜ் 31ம் 32ம் வசனங்கள் இதை தெளிவாக உணர்த்துகிறது.) Continue reading