கூந்தலுக்கு ஹெர்பல் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை

FB_IMG_1440989807419


 

கூந்தலுக்கு ஹெர்பல் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை
சிலருக்கு எந்த எண்ணெய் போட்டாலும் கூந்தல் உதிரும். அப்படிப்பட்டவர்களுக்கு ஹெர்பல் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் விரைவில் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இப்போது இந்த ஹெர்பல் எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். 

தேங்காய் எண்ணெய் – 50 கிராம் 
ஆலிவ் எண்ணெய் – 50 கிராம் 
பாதாம் எண்ணெய் – 50 கிராம் 
வைட்டமின் E எண்ணெய் – 50 கிராம் 
கடுகு எண்ணெய் – 50 கிராம் 
நல்லெண்ணெய் – 50 கிராம் 
கரிசலாங்கண்ணித் தைலம் – 50 கிராம் 
பொன்னாங்கன்னித் தைலம் – 50 கிராம் 
மருதாணித் தைலம் ­ 50 கிராம் 
வேம்பாலம் பட்டை – 50 கிராம் 
சூரியகாந்தி எண்ணெய் – 50 கிராம் 

இந்த கலவைகளை நன்கு கலந்து, மிதமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும். இதில் சில பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

Continue reading