பிரமாண்டமாய் ஓர் உலகம்-11

புத்தாண்டு தின வானவேடிக்கை மூலம் புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்!

நான் எழுதி வரும் பிரமாண்டமாய் ஓர் உலகம் என்ற இத்தொடரில் எத்தனையோ பிரமாண்டங்களைப் பற்றி  எழுதி வருகிறேன். அந்த வகையில் இப்போது நிகழவிருக்கும் கின்னஸ் உலக சாதனையாக கருதப் படும் வான வேடிக்கை நிகழ்வும் ஒரு பிரமாண்டந் தான். Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்.-10

துபாயைப் பார்க்கலாம் வாங்க!!

துபாய் நாட்டில் (Ansar mall, Sharjah) ஒரு கடை வாயிலில் எழுதி இருக்கும் வாசகம்…
“உணவு வாங்குவதற்கு பணம் இல்லை என்றால் இங்கு அடுக்கப்பட்டு இருக்கும் பானங்களில்,உணவு பண்டங்களில் ஒன்றை எடுத்து இலவசமாக சாப்பிடுங்கள்”..
பாராட்டுக்கு உரிய விஷயம் இது… பசியினால் செத்து மடிந்து போவதை கண் கூடாக பார்த்தும் உதவாத மனிதர்களுக்கு மத்தியில் இப்படியும் சிலர்….

Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்-9

அல்-அயின் வென்னீர் ஊற்று:(Al Ain Hot spring)

al8

துபாய் வருபவர்கள் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில் ஒன்று அல் அயினில் இருக்கும் வென்னீர் ஊற்று.
துபாயிலிருந்து 120 கி.மீ தூரத்தில் மலைகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது அல்-அயின் எனும் ஊர்.
துபாயில் இருந்தும், அபு தாபியிலிருந்தும் சம தூரத்தில் அமைந்துள்ளது.
நாங்கள் போன வேளை மழை நேரம். சார்ஜாவிலிருந்து கிளம்பும் போதே மழை வெளுத்து வாங்கியது. பிரயாணம் எப்படி அமையப் போகிறதோ என்ற அச்சத்துடனேயே புறப்பட்டோம். நல்ல வேளை மழை சார்ஜாவை தாண்டியதுமே எங்களுக்கு வழி விட்டு விடை பெற்று சென்றது. நம்மூர் மாதிரியெல்லாம் அடை மழை இங்கு இல்லை. மத்தாப்புச் சிதறல் போல சிறிது நேரம் வேடிக்கை காட்டி சென்றது மழை.
அல் அயின் சென்றடைந்ததுமே இதமான குளிர் காற்று தாலாட்ட ஆரம்பித்தது. Continue reading

10 of the UAE’s Biggest Moments of the Decade

10 of the UAE’s Biggest Moments of the Decade

1 Dubai Metro launched 
9 September 2009
At 9.09.09pm on 9/9/09 His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum, UAE Vice President, Prime Minister and Ruler of Dubai, opened the first urban train network in the Middle East. More than 110,000 people used the driverless system within the first two days and in the first six months it carried 10 million people. It’s the world’s longest fully-automated metro network at 74km! Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்-8

துபாய் 42வது தேசிய தின கொண்டாட்டங்கள்:

களை கட்டியது அமீரக 42 வது தேசிய தின கொண்டாட்டங்கள். அபுதாபியிலிருந்து ராசல் கேய்மா வரை, புஜைராவிலிருந்து துபாய் சார்ஜாவென எங்கும் இந் நாட்டுக் கொடிகள் பறந்து மொத்த அமீரகத்தையே போர்த்திக் கொண்டிருந்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் இந் நாட்டுக் கொடிகள்,தோரணங்கள் என ஜொலித்து கொண்டிருந்தது, பார்க்க பரவசமூட்டியது.

Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்-7

வாங்க துபாயைப் பார்க்கலாம்!

எனது துபாய் பயணம் பற்றிய பதிவின் இடையினில் துபாயின் அழகு தோற்றத்தை, வானளாவிய கட்டிடங்களை, அவைகளின் அழகு தோற்றத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.. அமீரக சகோதரர்கள் ,எங்களுக்கே துபாயா? திருநெல்வேலிக்கே அல்வாவா? என முணு முணுப்பது காதில் விழுகிறது. ஐயா! நீங்கள் தினம் தினம் கண்டு களிக்கும் இக் காட்சிகளை உலகின் மற்றைய பகுதிகளில் வாழும் நம் சகோதரர்களும் பார்த்து மகிழட்டுமே என்ற ஒரு ஆவல் தான். Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்-6

சிந்தகா சுரங்கப் பாதை(Al shindagha tunnel)

si1

துபாயில், டெய்ரா வையும் பர் துபாயையும் இணைக்கும் விதமாக கடலுக்கு அடியில்  1975 ல்ஒரு பிரமாண்டமான சுரங்கப் பாதைகட்டப் பட்டுள்ளது. டெயிராவிலிருந்து பர் துபாய்க்கு இடைய கிரீக் எனும் கடல் வழியை கடக்க ஏற்கனவே படகு போக்கு வரத்து இருக்கிறது.

si2

முன்பு 1977 களில், இதற்கு கட்டணமாக 25 ஃபில்ஸ் வசூலித்து வந்தது தற்போது ஒரு திர்ஹமாக உயர்ந்துள்ளது. இந்த சுரங்கம் 5 மீட்டர் உயரத்தில் நான்கு வழிச் சாலைகளால் அமைக்கப் பட்டுள்ளது. கடலுக்கு அடியில் செல்கிறோம் என்ற உணர்வு, அச்சம் சிறிதளவும் இல்லாத வகையில் ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பே இவ்வளவு நேர்த்தியாக கட்டியிருப்பது வியப்பினைத் தருகிறது. Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்!-1

பிரமாண்டமாய் ஓர் உலகம்!-1

 
alt
altalt
சார்ஜாவில் என் ஹஜ் பெருநாள்!
திடீரென துபாய் பயணம். பேரன் பேத்திகளுடன் பெருநாள் கொண்டாடலாம் என ஒரு ஆசை திடீரென உதயமாகியதும் அதற்கான பிரயாண ஏற்பாடுகள் ஒரே நாளில் செய்து முடித்து( விசா ஏற்கனவே இருந்தது) பெரு நாள் இரவு ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு இரவு 11 மணிக்கு துபாய் வந்தடைந்தேன். விமான தளத்தில் மகனின் குடும்பம் ஆவலுடன் காத்திருந்தனர். ஏற்கனவே கடந்த 3 வருடங்களாக நாலைந்து முறை வந்து போய் இருப்பதால் ஏர் போர்ட்டில் எந்த ஒரு கஷ்டமும் தெரியவில்லை,அதி……..க தூரம் நடப்பதை தவிர.
alt
துபாய் to சார்ஜா. சென்றடைந்து பிரயாண அலுப்பு நீங்க ஒரு குட்டித் தூக்கம்.காலையில் பெருநாள் தொழுகை சார்ஜா,ரோலாவில் உள்ள ரேடிஸன்(RADISSON) ஹோட்டல் பள்ளியில். நல்ல கூட்டம். காலை 7 மணிக்குள் ஈத் தொழுகை முடிந்தது.மதியம் அருமையான பிரியாணி நண்பரின் இல்லத்தில்.இரவு சார்ஜாவில் உள்ள நேஷனல் பார்க்கில் சிறிது நேரம் பொழுதை கழித்து விட்டு வீடு திரும்பினோம்.
alt
நேஷனல் பார்க் சார்ஜா ஏர்போர்ட்டுக்கு மிக அருகில் இருப்பதால் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை Air arabia விமானங்கள் மிகவும் தாழ்வாக தலையை தொடுகிற மாதிரி தரையிறங்கி கொண்டிருந்ததை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.இப்படியாக முதல் நாள் ஈத் பெரு நாளோடு பொழுது கழிந்தது.மீண்டும் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்…  
 
Engr.Sulthan 

பிரமாண்டமாய் ஓர் உலகம்-பகுதி 4

பிரமாண்டமாய் ஓர் உலகம்-பகுதி 4
November 19, 2013 at 10:00pm

துபாய்! பிரமாண்டத்திற்கு மறு பெயர் எதுவென்றால் துபாய் எனலாம். அந்த அளவுக்கு எங்கும் பிரமாண்டங்கள்..எதிலும் பிரமாண்டங்கள்…

துபாய்க்கு வருவது இது முதல் முறையல்ல. சமீப காலங்களில் 4 தடவைகள் வந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு தடவை வரும் போதும் துபாய் பயணத்தை பற்றி எழுத வேண்டும் என நினைப்பதுண்டு. அது இப்போது தான் கை கூடியிருக்கிறது.ஏறத்தாழ 35 வருடங்களுக்கு முன்பே நான் துபாயில் பணி புரிந்தவன் என்றால் உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
,

Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்!-2

காலை வேளை. பெருநாள் விடுமுறை வேறு. காலை வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் காரிலேயே அஜ்மானை ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். அழகாக வடிவமைக்கப் பட்ட ஊர் அஜ்மான்.

Continue reading

பிரமாண்டமாய் ஓர் உலகம்-3

துபாய்  அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம்
உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது.(இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நினைத்துப் பார்க்கிறேன்)

Continue reading