மெரினா என்றொரு வாழ்க்கை

marina_2513510d

சென்னையின் அழகு மட்டுமல்ல மெரினா. அது ஒரு தனி உலகம் ஏவி.எம். சினிமா செட்போலப் பரபரப்பாக இயங்குகிறது ‘குட்டி டிஜிட்டல் ஸ்டுடியோ’. திரும்பிய பக்கமெல்லாம் சினிமா நட்சத்திரங்களின் ஆள் உயர கட்-அவுட்கள். “உங்களுக்கு ஹன்சிகாவா… நயன்தாராவா?’’ ஏதோ கல்யாணத் தரகர் ரேஞ்சுக்குக் கேட்கிறார் கேமராமேன் முருகன். “ல்ல… நஸ்ரியா..” வெட்கப்படுகிறார் அந்த வடநாட்டுப் பையன். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பையன் நஸ்ரியாவோடு நிற்கும் கலர் போட்டோவைக் கண்ணாடிப் பையில் போட்டுக் கொடுத்துவிட்டு, “அறுவது ரூபா குடுபா’ என்கிறார்கள். அடுத்தடுத்து அபிமான நட்சத்திரங்களோடு சேர்ந்து போட்டோ எடுக்க வரிசை கட்டுகிறது இளந்தாரிகள் கூட்டம். Continue reading

தாமிரபரணி: நதியை நாசமாக்கும் நகரம்

tamirabarani_2508313d

சிந்துபூந்துறையில் தாமிரபரணி நதியில் கலக்கும் சாக்கடை.
காடுகளில் காப்பாற்றப்பட்ட தாமிர பரணி, நகரத்தில் நாசமானது. வனத்துறைக்கு இருக்கும் அக்கறை, உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு இல்லை. திருநெல்வேலியில் தாமிரபரணி தண்ணீரை கைநிறைய அள்ளித் சுவைத்ததை இன்னமும் அனுபவித்து கூறுகிறார்கள் பெரியவர்கள். அது எல்லாம் பழங்கதையாகிவிட்டது. இன்று ஆற்றில் குளிக்கவே அஞ்சு கிறார்கள். காரணம், ஆற்றில் கலக்கும் கழிவுகள். ஆறு மலையை விட்டு இறங்கியவுடனேயே பாப நாசத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் பெயரால் மாசுபடுகிறது. பாபநாசத்தில் ஆற்றில் வீசப்பட்ட சுமார் 100 டன் பழந் துணிகள் அகற்றப் பட்டதாக கூறுகிறார் தாமிரபரணி கல்யாணதீர்த்தம் தூய்மை அறக்கட்டளையின் செயலாளர் கபடி எஸ்.முருகன்.

Continue reading

குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம்


ஏமாளிகளாகப் போகிறோமா ? ஏவுதளத்தைத் தமிழகத்தில் அமைக்கப் போகிறோமா ?

குலசைக்கு ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம்

பெரியார் ஈ.வே.ரா.வின் வலதுகரமாகத் திகழ்ந்த தெய்வநாயகம் என்பவரைத் தமிழகத்திற்குத் தந்த ஊர் குலசேகரன் பட்டினம். பெயரில் கூட தெய்வம் இருக்கக்கூடாது என்பதற்காகத் தன் பெயரை, S.D.நாயகம் என்று வைத்துக்கொண்டார். பெரியார் தொண்டராக அல்ல தோழராக விளங்கினார். இவரது கல்விப் பணிக்குச் சான்றாக குலசை வள்ளியம்மாள் ஆசிரியைப் பயிற்சிப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சென்னை குண்டூர் சுப்பையா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர் ஆண்கள் மேல்நிலைபள்ளி போன்றவை இன்றும் சான்றாகத் திகழ்கின்றன. தன் வருவாய் முழுவதையும் கல்விக்காகவும், பொதுப்பணிக்காகவும் செலவிட்டவர் எஸ்.டி.நாயகம். கல்விக்கண் தந்த அவரது பெயரால் குலசைவாழ்ப் பெருமக்கள் இன, மத, மொழி, அரசியல் பேதமின்றி ஐக்கியமானால் ,ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி, குலசையில் ஏவுதளம் அமைவது உறுதி.நீர் விளையாட்டுநீர் விளையாட்டுக்கள் நடத்த ஏற்ற இடம் குலசை Continue reading

குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே(Kulasekarapatnam Light Railway (KLR)

எங்க ஊரு நல்ல ஊரு

குலசேகரன்பட்டிணம்..எங்க ஊரு ஒரு ஜீவ பூமி. இன்று மற்ற வளர்ச்சி பெற்ற ஊர்களுக்கு மத்தியில் ஒரு பாவ பூமியாக காட்சியளிக்கிறது. எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. 1952லிருந்து எத்தனையோ காங்கிரஸ்,திமுக,அதிமுக mla,MP க்கள் எங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் போதெல்லாம் அதைச் செய்கிறேன்,இதைச் செய்கிறேன் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டது தான் மிச்சம். இது வரை ஒரு துரும்பை கூட எடுத்துப் போட்டதில்லை. எங்க ஊரின் சாபக் கேடு இது. அனல் மின் நிலையம் வருகிறது வருகிறது என கடந்த 10 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “வரும் ஆனா வராது” என்பது போலத் தானிருக்கிறது. ஒரு காலத்தில் துறைமுகம் என்ன, சீனி ஆலை என்ன, ரயில்வே என கொடிகட்டி பறந்த ஒரு நகரம் இன்று பொழிவிழந்து,களையிழந்து மௌனமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது தான் மிச்சம். எங்க ஊர் கடல் நீர் கொஞ்சம் கரிப்பு ஜாஸ்தி. எங்களின் கண்ணீரும் அதனுடம் கலந்து விட்டதால் இருக்குமோ?

இந்நிலையில் ராக்கெட் ஏவு தளம் வரப் போவதாக ஒரு இனிப்பான செய்தி நாளிதழ்களில் .. இத்திட்டத்தையும் ஆந்திரா பக்கம் கொண்டு செல்ல அங்குள்ளவர்கள் கச்சை கட்டி நிற்கிறார்கள். எங்க தொகுதி mla,Mp எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. ஏற்கனவே பாரி கம்பெனிக் காரன் போட்ட ரயில் ரூட்டையாவது திரும்ப கொண்டு வர எத்தனையோ முயற்சிகள் பல பத்திரிகைகள் வாயிலாக,மனுக்கள் மூலமாக தனிப்பட்ட முறையில் செய்து வருகிறேன். நடக்கிறதா பார்ப்போம்.இனி இன்றைய தலைமுறையினரான இளசுகள் தான் போராட வேண்டும். Continue reading

ராக்கெட் ஏவு தளம் மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். Continue reading

சென்னையின் வரலாறு

 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. Continue reading

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்:

சென்னை:”தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும், திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், அமைக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மன்மோகன் சிங்க்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:”இஸ்ரோ’ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும்.

இதேபோல், இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை, நெல்லை மாவட்டம், குலசேகரபட்டினத்தில் அமைக்க வேண்டும். இப்பகுதி, ராக்கெட் ஆய்வு நிறுவனங்களுக்கு அருகில் உள்ளது. மேலும், பூகோள ரீதியாகவும், ராக்கெட் ஏவுதளம் அமைக்க உரிய இடம். இங்கு, திறன் வாய்ந்த பணியாளர்களும் இருக்கின்றனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களில், இவ்விரு நிறுவனங்களையும் அமைப்பதன் மூலம், தொழில்வளர்ச்சி இல்லாத இம்மாவட்டங்கள் பயன்பெறும். எனவே, முன்னுரிமை அடிப்படையில், இப்பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி:தினமலர்

குலசையில் ஒரு ஆறு!

karumeni river2

கருமேனி ஆறு

 

கருமேனி ஆறு குலசை வழியாக தவழ்ந்து மணப்பாடு அருகே கடலில் கலக்கிறது. இது தாமிரபரணி ஆற்றின் கிளை நதியாகும்.

Kulasai Railway

Kulasai Railway
??????????
This rare photo showing the Railway Time table of Tisayanvilai – Tiruchendur Route via Kulasekhara patnam in 1933.

Time tables of extinct Narrow Gauge lines in South India from Bradshaw 1933. Kulasekharapatnam Light Railway and KPM Central-Udangudi Branch. Interesting to note that the Kulasekharapatnam Light Railway had a branch line too.

K.P.M means Kulasekhara pattinam.
During my child hood at the age of 7 to 9 yrs old, I have seen the old railway track near kulasai beach(200 mts from my house).

Informations from Kulasai sulthan.

குலசை அனல் மின் நிலையம்

குலசேகரபட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் Engr.Sulthan அவர்களால் பதிவு செய்யப் பட்டது.
k2
குலசேகரபட்டினம்

குலசேகரபட்டினம்

இருப்பிடம்: குலசேகரபட்டினம்

குலசேகரபட்டிணம் (Kulasekharapatnam) இது இந்தியா வின் தமிழ்நாடு மாநிலம்தூத்துக்குடி மாவட்டம்உடன்குடி ஊராட்சி ஒன்றியம்திருச்செந்தூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு ஊர்.[3] [4]

இங்கு புதிதாக புதிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டுகிறது. 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும்பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) இணைந்து 2×800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசேகரபட்டிணத்தின் நுழைவில் அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.8694 கோடி; முடிவடைந்து பயனுக்கு வரும் காலம் 2015. இதற்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலயத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு வர திட்டம். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு நிலக்கரி கப்பல்துறை கட்டப்படவுள்ளது. ராட்சத மின் இயந்திரங்கள் பெல் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்துமில்லை என திட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

k1

புதிய செய்தி:  (21/7/2013)ஏற்கனவே பெல் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டு தற்போது தமிழக அரசே இத் திட்டத்தை ஏற்று மும்முரமாக செயல் படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

குலசை சுல்தான்

Kulasekharapatinam – குலசை

Kulasekarapatnam  குலசேகரப்பட்டிணம்) is a town in the Tuticorin district (formerly Tinnelvelly or Tirunelveli of Tamil Nadu, India. Kulasekharapatnam is referred to in Marco Polo’s travel diaries dating to 1250 AD. Kulasekharapatnam the name is derived from pandyan ruler Maravarman Kulasekara Pandyan I. Kulasekharapatnam was an ancient port dating to the 1st centuries of the Christian era and was contemporaneous to the existence of Kollam, Cheran Port, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Kulasekharapatnam served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kulasekharapatnam has Muslim settlements.The ancient port had connections with Ceylon, Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat.[1]
History of KULASEKHARAPATTINAM,
A coastal village in Tuticorin dist of Tamilnadu has its unique Dasara festival that attracts more than one million people to this infrastructure starved place.The festival that was celebrated in small scale with in the village in olden days has of late assumed much significance that people from all over Tamil nadu flock this place on this occasion and take part in the celebration.The vast stretch of seashore gives accommodation to the people go over here on this festive occasion .

Old Harbour mentioned by Marco Polo[edit]

Marco Polo describes the Pandyan port city of Kulasekharapatnam which even now we can see in the seashore of Kulasekharapatnam that Some Pillars which were used to give the right direction for ships as it is at this city that all the ships touch that come from the west, as from Hormos and from Kis and from Aden, and all Arabia, laden with horses and with other things for sale. And this brings a great concourse of people from the country round about, and so there is great business done in this city.
Marakkars & Rowthar Settlement

Now Kulasekarapatnam has Muslim Population as Marakkars or Marakkayars they were doing trade with Ships, they had come from Kerala, it is said Kunjali Marakkar’s family members coming from kerala. In Kulsekarapatnam till 1965 the small ships “Dhoni” operated from there. If one town was a port, it must have had a Light House. Kulasekharapatnam even now has a light house in near Manapad. In Kulasekharapatnam, now even called a part of this town Rawthar Paalyam that Rawthar is called to a section of Muslim that their trade with horses. kulasekharapatnam was also an important trade centre even before the arrival of Islam. Since 8th century AD, This city is inhabited by Muslims belonging to the Dravidian race.
text

Stamp Issued by Government of Indiak5

Kulasekharapatnam Ship Direction Pillar
k6

Kulasekharapatnam Customs Officek7

Sugar factory was running very successfully till the end of the British rule. Since the British rule Kulasekharapatnam has customs office. British Railway Line was established and it was called Kulasekharapatnam Light Railway and the stations were Kulasekharapatnam Central, Kulasekharapatnam Port and KPM Sugar factory in 1933.

History of Origin of Marakkars

Maraicar or Maraicayar, Marakayar, Maraicar is a distinctive Tamil and Malayalam-speaking Muslim people of the states of Tamil Nadu and Kerala in India. Let us first look at the name Marakkar. Note that this is different from Marakkayar though we will observe the connections after a while (Marikkar & Maricar are other spellings used in history books). According to many other historians, Moppila or Moplah is Maha Pillai (great son) and Marakkar means (Marakkalam is a wooden boat) ‘boatmen’. Thurston in his Tribes of S India, states the following – The word Marakkar is usually derived from the Arabic ‘Markab’, a boat. The story goes that, when the first immigrants of this class (they were apparently driven from their own country by persecutions) landed on the Indian shores, they were naturally asked who they were, and where they came from. In answer they pointed to their boats, and pronounced the word Markab, and they became in consequence Marakkars, or the people of Markab.

Was it also a titular name for seaborne traders? KVK Iyer clarifies in his history of Kerala that Marakkar was a prized title given by the Zamorin of Calicut. Derived from Marakka Rayar it signifies the captain of a ship Rayar (Captain) of Marakkalam (ship)
Traditionally, the Maricars engaged in mercantile commerce. They can be found along coastal areas of the states of Kerala and Tamil Nadu in India. They are generally considered to be of Middle Eastern(Arab) origin.
Most of us have heard and read about the famous Kunhali Marakkar and his exploits, but one question remains, where did they come from? There have been many questions about their real origins, were they Moplahs of Arab extract from Pantalayani Kollam (South of Calicut); were they of Sri Lankan origin, were they Tamil Marakkars or were they from Tulunad? The research was quite interesting and the result obtained cannot be termed fully conclusive but was quite revealing. For those here, and only interested in Kunjali’s story, this does not cover the life and times of any of the famous Kunhali’s but hovers only around theories of their possible origin.
The Maraicars can be found in coastal areas of South India, including Kerala and Tamil Nadu.
Around 12th century AD in Arab countries there was a dispute among two kings who belongs to the same royal family which later erupted in war. The defeated members of the royal family were packed in ships and banished with their captains and servants. Those who settled in coastal regions of India [Tamil Nadu and Kerala] are called marakala rayars, [MARAKALAM which means wooden boat and RAYAR which means king in the Tamil language]. The captains of the ships are called malimars (malumiyar comes from the Tamil word MALUMI and YAR, malumi means captain in Tamil) and the ship crew members are called sherangs. Even today malimars [malumiyars], sherangs and Maricars [Marakalrayars] are to be found living only on the coast of Tamil Nadu. Maricars can be found abundance in Maraikayar Pattinam (which is thought to be the ancestral hometown of the early Maricars), Parangipettai (Portonovo), Kulasekharapatnam, Kilakarai, Adirampattinam, Muthupet, Nagore, Nagapattinam, Manjakollai and various other coastal towns.
Cheraman Perumal, the ruler of Kerala embraced Islam

 k8Kulasekharapatnam Jumma Mosque amd Matharasa

Maraicars in Malabar are descendants of one of the missionaries in the team of twelve sent to Kerala during the time of Prophet Muhammed. It is said that the Maharaja of the then Kerala, Cheraman Perumal went to Arabia and accepted Islam in Mecca. He died there in Mecca and was buried there. While the Maharaja was there, he sent a team of twelve messengers in a ship to Kerala to preach the Islamic principles. The local rulers knew these people are sent by their own Maharaja and received them royally. The missionaries married women from the royal families and settled down in different parts of Kerala and Tamil Nadu. The descendants of each of them became a family and one was the Marakkar family. Kunjali Marakkars[1][2] were the most famous Marakkars among them.
Maricars dealt business with sea trade earlier
According to KVK Iyer, Kunjali after the destruction of Ponnani by Almeida approached the Zamorin and asked to fight the Portuguese. Impressed by his courage he was given this title by the Zamorin. It appears that the people who carried the title used a special silk turban on their heads. Don Lach & Ed Levy quoting Laval in the book ‘Asia in the making of Europe’ states that Marakkar means ‘viceroy’.
NM Nampoothiri quoting the Granthavaris of Calicut – Zamorin confirms the honorific title – In 1687 the Kuliyoti Kottakal Marakkayar was given the title Marakkayar. Another man, Kunnikkalathor was given the title Kunnali Marakkayar in the same year.

Engr.Sulthan

குலசை எங்க மண் !

k8

உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள்-

உச்சியில் நின்று பார்க்கிறேன்

ஒய்யார சுவனத்துப் பூங்கா இது!

இடி ஒசையாய் அலைகள்

இரவெல்லாம் தாலாட்டும்!

“அ” என்ற அகரம் எழுதிப்

பழகிய மண் இது.

கரு ஈந்து கல்வி தந்து

திரு கொண்ட திரவியம்

தந்த அட்சயப் பாத்திரம் இது.

ஆரம்பக் கல்வியில்

அடியெடுத்து நடைப் பழகிய

அசனியா கல்விக் கூடம் உண்டு.

உயிர்க் கல்வியாம் உயர்க் கல்வி

தந்த அக இருள் போக்கும்

திருவருள் பள்ளி இங்கு!

என் தமிழ் நாவைச் செதுக்கிய-

திரு நாவுக்கரசர்-தமிழ் தந்தவர்!

கணிதம் எனைக் காதலிக்க தூதுப் புறா-

பிரம்பறியா மகாலிங்க வாத்தியார்.

அன்பான அக்காக்கள்!

அடித்து நொறுக்கும்

இந்தி வாத்தியாரும் இங்கு உண்டு.

நன்றி நவிழும் வேளை இது.

நாளை எனக்குறியதா? தெரியாது

எல்லாம் வல்ல இறைவனுக்கும்

எனை ஈன்ற அன்னைக்கும்

நல் கல்வி தந்த ஆசான் களுக்கும்

நன்றி சொல்லும் வேளை இது.

“எலே மக்கா” என்ற தாரக மந்திரம்

நண்பர்களுடன் எனைக் கட்டிப் போடும்!

மதவாதம் பேசும் பெருசுகளின்

மடத்து திண்ணைகள் இங்கு இல்லை!

மூட நம்பிக்கைகளின் தாய்

வீடாம் தர்காக்கள் உண்டு-

மத நல்லிணக்கத்திற்கு

மகுடம் சூட்டும் எங்க மண்!

எனக்கொரு தாய் உண்டு வடக்கே!

என் நண்பனுக்கு தாய் வீடு தெற்கே!-

எனை தமிழ்- உலகறியச் செய்த மண்ணே-

இன்று நீயும் உலகெல்லாம்

செல்கிறாய் ஐம்பொன்னாய்!!

தவழ்ந்த மண்ணும் தளிர் நடை

பயின்ற ஊரும் மறக்க முடியாத ஒன்று.

தொலைந்த முகவரிகளைத் தேடிடுவோம்

தொடர்புக் கொண்டு மகிழ்ந்திடுவோம்

கருவில் எனைச் சுமந்த தமிழ் மண்ணே-

என் கல்லறைக்கும் ஒரு

இடந்தருவாயா தாய் மண்ணே!!
– குலசை.சுல்தான்.