ஏரிக்குள் கல்யாண மண்டபம்…

p36

‘பட்டா நிலம்’ என்கிறது அ.தி.மு.க…
வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம் வடிந்துவிட்டது. அந்தத் தாக்குதலின் சோகத்திலிருந்தும் பலர் மீண்டுவிட்டனர். ஆனால், இந்தச் சோகத்துக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. Continue reading

மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்

gallerye_010424168_1189811தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading

சங்கரா மீன் (Red snapper)

சங்கரா மீன் (Red snapper)


சங்கரா மீன்கள் (Red Snapper) மீன்களிலேயே பல வகைகள் உண்டு.பார்வைக்கு, கவர்ந்திழுக்கும் தொட்டி மீன்களைப் போன்ற அழகுடன் இளஞ்சிவப்பு நிறத்தை பொதுவான பண்பாக கொண்டிருக்கும் சங்கரா மீன்கள் நம்ம ஊரில் பரவலாய் அதிகம் விரும்பி உண்ணப்படும் மீன் வகைகளில் ஒன்று.
Continue reading

விளை மீன் – Emperor Fish

விளை மீன் – Emperor Fish

மீன் தொடரில் இன்றைக்கு விளை மீனைப் பற்றி பார்ப்போம். வெல மீன் என்று பரவலாய் உச்சரிக்கப்படும் இந்த மீன் வகை தமிழகத்தில் அனேக இடங்களில் ரெகுலராகவே கிடைக்கும். சிலேப்பி(திலேப்பியா) மீனைப் போன்ற அமைப்பில் இருக்கும் இந்த மீன்கள் மிகச் சிறிய அதாவது கிலோவிற்கு இருபது மீன்கள் நிற்கும் அளவிலிருந்து அதிக பட்சமாக ஒரு மீனே இரண்டு மூன்று கிலோ வரை உடைய அளவிலும் கிடைக்கும். இன்னும் பெரிய அளவிலும் இவை வளரும். இங்கே விற்பனைக்கு வருபவற்றில் அதிகபட்சமாக மேற் சொன்ன எடை அளவிலேயே கிடைக்கும்.

 முந்தைய தொடரில் பார்த்த ஊடகம் மீனைப் போன்ற விளை மீன்களும் குழம்பிலும் அசத்தும், வறுவலிலும் பிரமாதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையில் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் சிக்கலான முள் அமைப்பும் கிடையாது.

விளை மீன்களில் பல ரகங்கள் உண்டு. சற்றே சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிற விளை மீன்களும், இளஞ்சிவப்பு விளை மீன்களும் இங்கே அதிகமாய் கிடைக்கும் வகைகள். இவை இரண்டையும் ஒப்புமை படுத்தும்போது இளஞ்சிவப்பு விளை மீன்கள் சற்றே கூடுதல் சுவையோடு இருக்கும். ஆனாலும் வெள்ளை நிற விளை மீன்களும் சுவையானவையே, மேலும் அவைதான் பெரும்பாலும் விற்பனைக்கு அதிகமாய் வரும்.

சிவப்பு விளை மீன்களில்கூட சிறு சிறு வேறுபாடுகளுடன் நிறைய வெரைட்டிகள் உண்டு. தோள் தடிமனாய் ஒரு வகை உண்டு. அவை விளை மீன்களின் அடையாளத்தில் இருப்பினும் துடுப்புகள், வடிவம் இவற்றில் வித்தியாசப்படும். அந்த வகை அவ்வளவு சுவையோடு இராது.
விளை மீன்களை அடையாளம் காண கீழே படத்தில் இருக்கும் மீனில் குறிப்பிட்டு இருக்கும் அடையாளங்களை கவனிக்கவும்.

  •  மீனின் நடுவில் ஒரு நீண்ட கோடு அமைப்பு இருக்கும்.(வேறு சில மீன் வகைகளிலும் இந்த கோடு இருக்கும், ஆனாலும் அந்த மீன்களின் வடிவம் வேறு விதமாய் இருக்கும். விளை மீனின் அமைப்பில் இருக்கும் கறி மீன், சிலேப்பி மற்றும் சில ஏரி கெண்டை மீன்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள இந்த கோடு அமைப்பு உதவும்)
  • மேற்பகுதில் டைமண்ட் ஷேப் தெரிவதைப் போன்ற செதில் அமைப்பு இருக்கும்.
  •  வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் இருப்பது போன்றே உடலின் மேல் ஆங்காங்கே Bold செய்தது போல செதில்களின் கோடுகள் அழுத்தமாய் தெரியும். சில மீன்களில் போல்ட் செய்யப்பட்ட அமைப்பு சிக்சாக் வடிவத்தில் தெரியும்.
விளை மீன்களில் சில வகைகள் கீழே:
 (நம்ம ஊரில் அதிகமாய் கிடைக்கும் ரகம்)
 (அவ்வப்போது கிடைக்கும் ரகம் முதல் தர சுவையுடையது)
சென்னையில் கிலோ ரூ.200 லிருந்து ரூ.300 வரை விற்கப்படும் இந்த விளை மீன்கள் மற்ற இடங்களில் கிலோ ரூ.150 லிருந்து ரூ.200 வரை கிடைக்கும். விளை மீன்கள் சற்றே பழைய மீனாய் இருந்தாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கும். புது மீன்,பழைய மீன் என பார்த்த உடன் அடையாளம் காணுவது விளை மீன்களில் கடினம். செவுள் சிவப்பு நிறத்தில் தெரிந்தால் மட்டும் வாங்கவும்.
 விளை மீன்களை வறுவல் செய்யும் போது சற்று டீப் ஃபிரை செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். மேலும் சதைப்பற்றுடன்  இருக்கும் இந்த விளை மீன்கள் டீப் ஃபிரை செய்யும்போதே உள்ளே இருக்கும் சதையும் நன்றாக வெந்து சுவை கூடும். இல்லையெனில் உள் பக்கம் வேகாதது போன்று ஒரு வித பச்சை வாசத்துடன் சுவையும் மாறுபடும். குழம்பில் தேங்காய் அதிகமாய் சேர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். தேங்காய் இல்லாமல் வைத்தாலும் சுவையோடவே இருக்கும்.

காரப்பொடி (Ponyfish)

காரப்பொடி (Ponyfish)

பொதுவாக மீன் பிரியர்கள் வஞ்சிரம்,வாவல்,ஷீலா,கொடுவா என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலைத் தாண்டி வேறு மீன்களை வாங்க மாட்டார்கள். இவற்றைவிட விலை குறைவாக, அதே வேளையில் வஞ்சிரம் வாவலுக்கு சுவையில் ஈடு கொடுக்கும் எத்தனையோ மீன் வகைகள் உண்டு. இவற்றைக் குறித்து தெரிவதில்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று பழகிய மீன் லிஸ்ட்டிலேயே நின்றுவிடுகிறார்கள்.

மீன்கள் வாங்கும் போது எல்லா வகை மீன்களும் குழம்பிற்கும் வறுவலுக்கும் உகந்ததாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய சைஸ் மீன்கள் வாங்கும்போது பெரும்பாலும் அந்த மீனின் தலை,வயிறு மற்றும் வால் பகுதிகளை குழம்பிற்கும் மற்றவற்றை வறுக்கவும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வஞ்சிரமோ, வாவலோ வறுவலில் இருக்கும் சுவை குழம்பில் இருக்காது. கிலோவிற்கு  500 ரூபாய் கொடுத்து இம்மாதிரி பெரிய மீன்களை வாங்கும்போது குழம்பிற்கென்று ஒரு ஐம்பது ரூபாய்க்கு காரப்பொடி, நகரை, சுதும்பு, பன்னா போன்ற பொடி மீன்களை வாங்கிவிட வேண்டும். பெரிய மீன்களைவிட பொடி மீன்களே குழம்பிற்கு சுவை கொடுப்பவை. சாப்பிடவும் ருசியாக இருக்கும். இந்த பொடி மீன்கள் சில நேரங்களில் எல்லா மீன்களும் கலந்த மாதிரியும் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது தவற விடக்கூடாது. இப்படி கலந்து கிடைக்கும்  மீன்களை பல பொடி என்பார்கள். பல பொடிகளைப் போட்டு வைக்கும் குழம்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது எனலாம்.

பொடி மீன்களில் ஒன்றான காரப்பொடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காரப்பொடியில் பெரிய சைஸ் மீனே அதிகபட்சமாக 200 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த பெரிய சைஸ் காரப்பொடி கிலோ 150 வரை கிடைக்கும். சிறிய சைஸ் கிலோ 60லிருந்து 100 வரை சைஸிற்கு ஏற்றவாறு கிடைக்கும்.

இன்று டெல்லிக்கு நாளை சென்னைக்கு..!

105

இந்தியாவின் தலை நகரான டெல்லி, இந்த கடுங்குளிரிலும் தகிக்கிறது.

காரணம், மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அரசு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உஷ்ணம் தான்.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட 10 மடங்கு அதிக மாசு நிறைந்த காற்றை அங்குள்ள மக்கள் சுவாசித்தால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுதான் மக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்தது. Continue reading

நகரை மீன்

நகரை மீன் – red mullet – goat fish

செந்நகரை,நவரை ,கல் நகரை என்று பலவாறு அழைக்கப்படும் நகரை மீன்கள் சிறிய வகை மீன்களில் ஒன்று. பொதுவான பண்பாக சிவப்பு நிறத்தை கொண்டிருந்தாலும் நகரை மீன்களில் சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வகைகள் உண்டு. எனினும் சுவையில் ஒன்று போலவே இருக்கும். சிறிய வகை மீன் என்ற போதும் சதைப்பற்றுடன் இருக்கும். கீழே படத்தில் இருப்பவை நகரைகளில் சில வகை.

Continue reading

ஊடான் மீன்

ஊடகம் – ஊடான்

 ஊடகம் மீன், சிறிய வகை மீன் இனத்தில் ஒன்று. இதன் பெரிய அளவு என்பது கால் கிலோ அளவிற்கு எடை கொண்டதாக இருக்கும். குழம்பு, வறுவல் என இரண்டிற்கும் ஏற்ற வகை மீன்களில் ஊடகம் குறிப்பிடப்பட வேண்டிய மீன். பொதுவாக குழம்பு,வறுவல் என இரண்டிற்கும் ஏதுவான மீன்களில் வறுத்த மீன்களைவிட குழம்பு மீன் சற்று மட்டுப்பட்ட சுவையிலேயே இருக்கும். ஆனால் ஊடகத்தில் பட்டி மன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு குழம்பு,வறுவல் என இரண்டிலுமே வேறு வேறு விதமான சுவைகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல பிரமாதமாய் இருக்கும்.

Continue reading

நான்கு மெழுகுவர்த்திகள்

98

✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்😇😇😇
இந்த கதையை.}

நான்கு 🎍🎍🎍🎍மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் 💨காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!

💨காற்றை கண்டதும்…

‘அமைதி‘ என்ற முதல் 🎍மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
💨காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

Continue reading

2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்!

2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்!

’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே…

1. சென்னை வெள்ளம்

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர்  உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் சமூக வலைத்தலங்களே. அண்மையில், தரையில் மட்டுமின்றி, சமூக வலைத்தலங்களின் திரையிலும் நிரம்பி ஓடியது தமிழகப்  பெருமழை மற்றும் வெள்ளமே.

Continue reading

நம்பிக்கை திவ்யா!

66

‘‘பிறக்கும்போதே பார்வை இல்லை

‘‘இங்கு 100% நிறையோட யாரும் பிறக்கிறதில்ல. ஆரோக்கியம், அறிவு, குணம்னு எல்லோருக்கும் ஒரு குறைபாடு இருக்கு. அந்த வகையில் எனக்குப் பார்வைக் குறைபாடு. அதை விதினு நோகாம நம்பிக்கையோட நடை போட்டேன். இன்னிக்கு வெற்றிநடை போடுறேன்!’’

– மெலிதான குரலில் தன் வலிமை சொல்கிறார், சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியை திவ்யா!

Continue reading

இப்படியும் ஒரு பெண்ணா?

64

8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார்,

தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார்.
மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்றுவிடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது.
Continue reading

கேரளாவில் 500 ஜோடி  இரட்டையர்கள் வாழும் அதிசய கிராமம்.!

63
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ளது கோடினிகி கிராமம். 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கிராமத்தில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.
 
இவர்களில் 1000 பேர் அதாவது 500 ஜோடிகள் இரட்டையர்களாக உள்ளனர். இங்கு வசிக்கும் பல குடும்பங்களில் உள்ளவர்கள் இரட்டையர்களாக இருக்கும் தகவல் சமீபத்தில் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 

ஆதரிப்போம்‬ நல்லவர்களைத் தேடி..தேடி

62

ஐரோப்பா முழுவதும் நடமாடும் இலவச உணவகத்தை நடத்திவரும் பிரிட்டன் முஸ்லிம் கபூர் உசைன்.!

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரார் பிரிட்டனை சார்ந்தவர் பெயர் கபூர் உசைன்

இவர் இரண்டு அடுக்கு கொண்ட ஒரு வாகனத்தை விலைக்கு வாங்கி அதை நடமாடும் இலவச உணவகமாக மாற்றியிருக்கிறார் Continue reading

பயபுள்ள சரியாகதானே சொல்லிருக்கான்…

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்..சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..வாதாடினான்..!

சரி.. அப்படி என்ன தான்கேள்விகளுக்கு
பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
Continue reading