மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு: 

FB_IMG_1439869838365

மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு: 
21 ம் நூற்றாண்டின் மிக பெரிய சாதனை மறைக்கப்பட்ட வரலாறு!!

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர் பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்… தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
Continue reading

கைப்பையில் மடித்து கையுடன் எடுத்து செல்லும் மோட்டார் சைக்கிள். இங்கிலாந்து மாணவன் சாதனை.

IMG_9795266663288தற்போதைய பரபரப்பான வாழ்வில் இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இரண்டு சக்கர வாகனங்கள் மனிதனின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்கின்றது. ஆனால் இரண்டு சக்கர வாகனங்கள்  வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய கவலையே அதனை பாதுகாப்பது மற்றும் அவற்றை நிறுத்துவதற்குரிய இடத்தை கண்டுபிடிப்பது ஒன்றுதான். Continue reading

காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம்

 

IMG_4659087898070இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் ஒன்று  தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்’ என்ற இந்த இயந்திரத்தை ‘வாட்டர்-ஜென்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.15 செலவாகும் நிலையில், வெறும் ரூ.1.50 காசுகளில் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். இந்த எந்திரம் இயங்கும் செயல்முறை பற்றி சி.என்.என். தொலைக்காட்சிக்கு விளக்கிய நிறுவனத்தின் சி.இ.ஓ. கோகவி கூறுகையில், ”இயந்திரத்திலுள்ள ‘ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்’ வழியாக காற்று செலுத்தப்படுகிறது. அப்போது சுத்தமான காற்றில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படுகிறது. பிறகு நீராவியானது திரவ வடிவமாக மாறி காற்றிலிருந்து நீரானது பிரிகிறது. அந்த நீர் இயந்திரத்திற்குள் இருக்கும் சிறிய டேங்க் மூலமாக சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, இறுதியாக சேகரிக்கப்பட்ட நீர் ‘எக்ஸ்டென்சிவ் வாட்டர் பில்ட்ரேஷன் சிஸ்டம்’ வழியாக ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 250 முதல் 800 லிட்டர்கள் வரை குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.  Continue reading

உங்கள் மொபைல் போன் பேட்டரியை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

IMG_13246252702607நமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

அதன் தேவைகளும், அதன் மூலம் பெறப்படும் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இருப்பினும் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும். Continue reading

ஒரே செடியில் மேலே ‘தக்காளி’,வேரில் ‘உருளை’ விளையும் விநோதம்

IMG_534836204300விவசாய தொழில் நுட்பம்…

டொம்டாட்டோ’: ஒரே செடியில் மேலே ‘தக்காளி’,வேரில் ‘உருளை’ விளையும் விநோதம்

லண்டன்: ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும் வண்ணம் இங்கிலாந்தில் புதிய செடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை தற்போது கண்டறிந்துள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. Continue reading

இ மெயில் இயங்குவது இப்படித்தான்….!

IMG_445574381634

இன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.

 

பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம். ஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள். அது அவுட்லுக் அல்லது தண்டர்பேர்ட் ஆக இருக்கலாம்.

 

இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் (Mail User Agent MUA) என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (Simple Mail Transfer Protocol SMTP) என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன.

இந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன

நன்றி.சிந்திங்க

நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்


விளம்பரங்கள் பார்க்கிறோமே… கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு… கரண்ட் பில் கட்டியாச்சுன்னு…. இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர… Continue reading

10 things you don’t do on internet | இன்டர்நெட் நீங்கள் செய்ய கூடாத காரியங்கள்.

இன்டர்நெட் நீங்கள் செய்ய கூடாத காரியங்கள். இதை செய்தால் உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்

10 things you dont don on internet

Unlocking Your Phone 

இந்த புதிய வருடம் முதல் உங்கள் போனை அன்லாக் செய்து பல அனுமதியெல்லாத தகவல்களை பெறுவது குற்றமாகும். Continue reading

1 கிளிக்கில் அவசியமான 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

 

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். Continue reading

எரிபொருள் பிரச்சினைக்கு எளிய தீர்வு கண்ட இளைஞர்கள்

  • ரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் கருவி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்துடன் கார்த்திகேசன், முரளி, சிவச்சந்திரன்.
    ரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் கருவி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்துடன் கார்த்திகேசன், முரளி, சிவச்சந்திரன். Continue reading

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்…!


தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. Continue reading

நாளைய உலகம் – கூகிளின் கூட்டணி!


கூகிளின் கூட்டணி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துவிட்டன. அரசியல் கட்சிகள் ஆள் இழுப்பு வேலைகளை தொடங்கிவிட்டன. இத்தருணத்தில் பிரபல தேடுபொறியான கூகிளும் தேர்தலுக்காக புதுக்கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது. ‘தேர்தலில் கூகிளா? எந்த கட்சியுடன்? எத்தனை சீட்? என்று கேட்க வேண்டாம். ஏனென்றால், கூகிளின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமானது. Continue reading