தேன்..தேன்..இனிக்கும் தேன்

215

சிறுவயதில் தேன் இருக்கும் பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து ருசித்தவர்கள் கூட, வளர்ந்த பிறகு தேனை மறந்து விடுகிறார்கள். அது ஏதோ மருந்துப் பொருள் என்றே பலரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், தேன் ஒரு மகத்தான உணவு என்பது இக்கட்டுரையின் மூலம் முழுமையாய் விளங்குகிறது. என்னென்ன அற்புதங்கள் மறைந்துள்ளன இந்த தேனில்… தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

Continue reading

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?FB_IMG_1451969164714

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

Continue reading

அல்குர்ஆன் கூறும் தேனீ + தேன் ஆராய்ச்சி படிப்பினை..!

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

(குர்ஆனும் அறிவியலும்)

உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.   இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.  

Continue reading

தேன் கெடாமலிருக்க…


தேன் பாட்டிலில் இரண்டு மிளகை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. நீண்ட நாள் தேன் கெட்டுப்போகாமலிருக்க, இரண்டு அல்லது மூன்று நெல்மணிகளை தேனில் போட்டு வைத்தால் தேன் எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது.

ரவையில் பூச்சி வராமலிருக்க ஆறு அல்லது ஏழு கிராம்புகளை போட்டு வைக்க வேண்டும். Continue reading

தேன் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.

honey-41375415405

தேன் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை சிறிது காண்போம்…!

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும். Continue reading

தேன் இளைக்கும்… நெய் பெருக்கும் !


தேன் இளைக்கும்… நெய் பெருக்கும் ! அநியாயத்துக்கு இளைச்சுப்போன உடம்பை பெருக்கச் செய்றது எப்படி?

அதேமாதிரி, அநியாயத்துக்கு பெருத்துப்போன உடம்பை இளைக்கச் செய்றது எப்படி?னு தெரியாம பலபேரு திண்டாடிக்கிட்டு நிப்பாங்க. என்னென்னவோ வைத்தியமெல்லாம் பண்ணிப் பார்த்து, காசையெல்லாம் கரைச்சிட்டு நிக்கறவங்கள பட்டியல் போட்டா… அது கன்னியாகுமரியில இருந்து காஷ்மீர் வரைக்கும் கூட நீளும். நீங்க அந்தப் பட்டியல்ல சேராம இருக்கணும்னா… இந்த பாட்டி சொல்ற வைத்தியத்தை பக்குவமா செஞ்சுப் பார்த்து, பலனைச் சொல்லுங்க. Continue reading

தேன் ஒரு மாமருந்து


தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.

மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. Continue reading

நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா?

நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா? வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம்..எத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் “தேன் “….

தேன் என்று சொல்லி சக்கரைபாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா..???? என்பதை அறிவது எப்படி..?

அதற்கு இதோ இரண்டு வழிகள்.. Continue reading

தேன் கலந்து சாப்பிடும் முறையும் பலனும்”…..


* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும். Continue reading

தேன் கலவைகள்

தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.—-மருத்துவ டிப்ஸ்,

தேவை கொஞ்சம் தேன்…தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)
தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே.  பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.
கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும்.  இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.
தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.  நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும்.  ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது. 

தேனின் மருந்துவ குணங்கள்:
– பசியை அதிகரிகச் செய்யும்
– உடற்கழிவை இலகுவில் அகற்றும்
– நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும்
– குருதியை தூய்மைப்படுத்தி, சிவப்பனுக்களின் உற்பத்தியைத் தூண்டும்.
– சீழ் பிடித்த புண்ணை குணப்படுத்தும்
– வயிற்றுப் புண்ணை ஆற்றும்
– நரம்புகளுக்கு வலுக்கொடுத்து கை, கால் நடுக்கத்தை போக்கும்
– எலும்புகளுக்கு வலிமையைத் தரும்
– தீப்புண்ணை ஆற்றவல்லது.
– சரும நோய்களுக்கு சிறந்த நிவாரணி
– மூளைக்கு இரத்தோட்டத்தை சீராக்க நினைவாற்றல் அதிகரிக்கும்
– போதைப் பொருட்களின் நஞ்சை முறிக்கும்
– உடல் சூட்டை தணிக்கவல்லது
– உடல் வனப்பையும் தாது விருத்தியையும் அதிகரிக்கும்
தேனில் பதனிட்ட இஞ்சி
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலரவைத்து. அதிலுள்ள நீர் காய்ந்ததும், அதை ஒரு கண்ணாடிப் போத்தலில் போட்டு, சுத்தமான தேனை ஊற்றிக் கலக்கி மூடி வைக்கவேண்டும். இது நெடு நாள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியது. காலையிலும் மாலையிலும் இரண்டு தொடக்கம் மூன்று துண்டுகளை சாப்பிட சுவையாக இருப்பதோடு, சமிபாட்டு நோய்களும் வராது.
தேனும் இஞ்சிச் சாறும்
இஞ்சியைத் தோல் நீக்கி நசுக்கிப் பிளிய சாறு வரும். சற்றை வடிகட்டி எடுத்து, ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றிற்கு ஒரு கரண்டி தேன் என்னும் அளவில் கலந்து காலையில் அருந்தி வர, இரத்தம் சுத்தப்பட இரத்தம் விருத்தி அடைவதோடு, வாத, நரம்பு சம்பந்தமான நோய்கள் தலை காட்டா.
தேனும் பாலும்
நீண்ட நாள் நோயுற்று இருந்தோர்க்கும், உடல் நலம் குன்றியோர்க்கும், பாலில் தேனைக் கலந்து தினமும் கொடுத்து வர, உடல்; போசக்குப் பெறும், சோர்வு நீங்கி, புதிய தென்பு உண்டாகும்.
தேனை எல்லா வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நன்றி:பெட்டகம்