பருமனுக்கு அரிசி வடை

The primary outcome was the change in diet - obesity. 100 million people worldwide with this problem. Treatment of these 30 million   people are in need of a problem. A third of Indians are obese. On one hand, due to diet, daily deaths in the ongoing case, the page   size problem ... India is one of the Mystery.
உணவுப்பழக்கத்தின் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள முதன்மை விளைவு – பருமன். உலகெங்கும் 100 கோடிப் பேருக்கு இந்தப் பிரச்னை. இவற்றில் 30  கோடி பேர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு சிக்கலில் இருக்கிறார்கள். மூன்றில் ஒரு இந்தியர் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்.  ஒரு பக்கம், உரிய  சத்துணவு கிடைக்காமல், நாள்தோறும் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் பருமன் பிரச்னை… இந்தியாவின்  வினோதங்களில் இதுவும் ஒன்று.

சென்னைவாசிகளில் 38 சதவிகிதம் பேர் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இந்தியாவின் பருமன் பட்டியலில் பஞ்சாப்,  கோவா, ராஜஸ்தானை அடுத்து நான்காவது இடம் தமிழகத்துக்கு. நாகரிகம், நவீனம், பெருமிதம் என்ற பெயரில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட  விபரீதம் இது. பருமனால் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவிகிதம் பெண்களே என்கிற அந்த ஆய்வு, கடந்த 15 வருடங்களில் பிறந்த குழந்தைகள்  எடைச் சமநிலை இல்லாமல் பிறப்பதாகவும் எச்சரிக்கை மணி அடிக்கிறது. அதிக எடை கொண்ட குழந்தைகள் மரபு நோய்களுக்கு ஆளாக நேரிடும்  என்றும் சொல்கிறது அந்த ஆய்வு. 62 சதவிகிதம் பேரின் பருமனுக்கு தவறான உணவுப்பழக்கமே காரணம்.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்… நம் பாரம்பரிய சத்தான உணவுகளில் மேற்கத்திய கொழுப்பும் சர்க்கரையும் உப்பும் மிதமிஞ்சிக்  கலந்துவிட்டது. நேரடியாக கொழுப்பாகவும் சர்க்கரையாகவும் திணிக்கப்படும் உணவை நம் வயிறால் எதிர்கொள்ள முடியவில்லை. வெளியேற்ற  வழியறியாமல், செயல் இழந்து, கொட்டப்படுகிற கலோரியை முழுமையாகச் சேமிக்கிறது நம் உடல். ஒவ்வொரு மனிதனும் தினம் அரை மணி  நேரமாவது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி – 1 கப்
தேங்காய் – அரைமூடி
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் எண்ணெய் –
பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியை வறுத்து, இடியாப்ப மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், வெங்காயத்தை  சிறுதுண்டுகளாக வெட்டி தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் அரைப் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை மாவில் சேர்த்து, உப்பு  சேர்த்து பிசைந்து, வட்டவடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். மாவில் தண்ணீர் அதிகமானால் எண்ணெய் காலியாகி விடும்…  கவனம்!

ஆனால், 60 சதவிகிதம் பேர் அரைமணி நேர உடல் உழைப்பில் கூட ஈடுபடுவதில்லை என்பதே யதார்த்தம். இவ்வாறு அரைமணி நேரம் உழைத்தால்  மட்டுமே ஆண்டுக்கு 19 லட்சம் பேரின் மரணத்தை தடுத்து விடமுடியுமாம்.  உணவுச்சூழலும் உழைப்புச் சூழலும் மாறியதே பருமன் போன்ற  வாழ்க்கைமுறை நோய்களின் தாக்குதலுக்குக் காரணம். இனியும் இதுபற்றி யோசிக்காவிட்டால் அடுத்த தலைமுறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்  என்கிறார்கள் மருத்துவர்கள்.  இந்த விஷயத்தில் தமிழகம் கேரளாவிடமும் கர்நாடகத்திடமும் பாடம் படிக்க வேண்டும். கர்நாடகத்தில் நீரிழிவுத்  தாக்குதல் அதிகமாகத் தொடங்கிய நிலையில், உடனடியாக தானிய உணவுகள் பற்றிய பரப்புரை தொடங்கப்பட்டது.

நான்கைந்து ஆண்டுகளில் கேழ்வரகு, கம்பு, கோதுமை, சாமை என முழுக்க, முழுக்க தானியத்துக்கு மாறிவிட்டது கர்நாடகா.  ஆயுர்வேத சிகிச்சைக்குப்  பெயர்போன கேரளாவிலோ ஒருபடி மேலே போய் உணவே மருந்தாக மாறி இருக்கிறது. சைவ, அசைவ வேறுபாடு இல்லாமல், திட்டமான  சேர்மானங்கள், செய்முறைகளால் வயிறே வாழ்த்தும் அளவுக்கு சமைக்கிறார்கள். பண்டிகைக்கால பதார்த்தங்களும் அதே நேர்த்தி. கேரள மக்களின்  எழிலுக்கு அவர்களின் உணவும் ஒரு காரணம்.

அரிசி வடை கேரளத்தின் பாரம்பரிய பதார்த்தம். வடிவத்தில் நம்மூர் பருப்பு வடையை ஒத்திருக்கும் இது, தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுப்பதால்  தனித்துச் சுவையோடு இருக்கிறது. உடலை வதைக்காத இதமான பதார்த்தம்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்!

 

Cholesterol is a major reason for becoming obese. A wax-like substance that is produced in the liver cholesterol. It is found in some   foods category.
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது  சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு  தேவைப்படுகிறது

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம்  போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு  மாறாக இவற்றை சாப்பிட்டால்  உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா,  டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு  கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி  மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும்  உண்டு. சமீபத்திய எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய  வந்துள்ளது.

அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக்  கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக்  கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13  சதவீதம் குறைந்திருந்தது.

ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய  நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு  மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு  முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.

சித்த மருத்துவம் மூலிகை கைமருந்து

.

சித்த மருத்துவம் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற உயர் தத்துவத்தை கொண்டது. இந்த தத்துவத்தை அறிந்த மேலை நாடுகள் தற்போது சித்த மருத்துவத்தைப் பற்றி மேலும் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறார்கள். சிறப்பு மிக்க இந்த மருத்துவம் நோய்களுக்கு பின் விளைவுகள் இன்றி நிரந்தர தீர்வுகள் காண்பதைக் கண்டு மாற்று மருத்துவத் துறையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து கடந்த ஆண்டு சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை தொடங்கி சித்த மருத்துவ ஆய்வுப் பணிகளை தொடர வழிவகுத்துள்ளார்கள்.
இன்று ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூட மூலிகை மருந்துகளை தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு கொடுத்து பரிந்துரை செய்கிறார்கள்.
நாம் அன்றாட வாழ்க்கை நடவடிக்கையில் எளிதில் கிடைக்கக் கூடிய மருத்துவ குணத்துடன் நோய் தீர்வு மூலிகையின் பயன்பாடுகளை பார்ப்போம்.
ஜாதிக்காய் தூக்கமின்மை போக்கும்…
மனிதனுக்கு முக்கியமான ஓய்வுகளில் தூக்கம் ஒரு இறைவனின் கொடை. தூக்கம் இன்மையால் நம்மில் பலர்படும் மனக்கஷ்டம் அதிகம். தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு சாப்பிட்டால் குணமாகும். பேதி ஏற்பட்டு ஓய்வெடுக்கும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்ய ஜாதிக்காயைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.
வாய்துர்நாற்றத்தைப் போக்கும் கொத்தமல்லி
வீடுகளில் சமையல் கூடத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கொத்தமல்லி விதையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்கும். அத்துடன் பசியைத் தூண்டி வயிற்றில் உள்ள வாயுவை நீக்கும். கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளதால் தினமும் இதை பயன்படுத்தினால் மாலைக்கண் போன்ற நோய்கள் வராமல் பாதுகாப்பு பெறலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகள் தீர கொத்தமல்லி விதையை வறுத்து பொடி செய்து கொடுக்கலாம். கொத்தமல்லி பொடியை தினமும் உபயோகித்தால் இருதயம் வலிமை பெறும். உடலுக்கு வன்மையும், ஆண்மையும் அதிகரிக்கும்.
கொத்தமல்லி விதை மிக எளிதாக கிடைக்கக் கூடியதால் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பேணி வரலாம். யுனானி மருத்துவர்கள் இதை ஊறல் குடி நீராகச் செய்து பிரசவித்த பெண்கள் உடல் வலிமை பெறக் கொடுப்பார்கள்.
வயிற்று பிரச்சனை வரவிடாமல் தடுக்கும் சீரகம்…
சீர்+அகம்= சீரகம் அகம் – வயிற்றைச் சீர் செய்வதாலேயே இப்பெயர் பெற்றது. சீரகத்தை மணத்திற்காகவும், செரிமானத்திற்காகவும் உணவில் சேர்ப்பது ஒவ்வொரு வீட்டிலும் வழக்கம். வெந்நீரில் சீரகத்தை போட்டு சிறிது நேரத்திற்கு பின்பு அருந்துவது வழக்கம். பித்த சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் இது சிறந்து விளங்குகிறது. மேலும் வயிறு, சம்பந்தமான நோய்களிலும் இதை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள். சீரகம் மூலம் உடல் வெப்பம் குறையும். வயிற்று வலி, ஈரல் நோய், கல்லடைப்பு, இரத்த போக்கு, இளைப்பு, தொண்டைவரட்சி, மூக்கு நீர் பாய்தல் மற்றும் வாத நோய்களை விலக்கும். உடலுக்கு வலிமையைத் தந்து கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பித்தத்தினால் ஏற்படும் வயிறு பிரச்சனைகளைப் போக்கி பசியை உண்டாக்கி உணவை நன்கு செரிக்கச் செய்யும் சக்தி கொண்டது.
குழந்தை வயிற்று கிருமியை அழிக்கும் திப்பிலி …
திப்பிலியையும், திப்பிலி மூலத்தையும் நன்கு பொடி செய்து குறிப்பிட்டளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் மறைந்து போகும். திப்பிலி மூலம், சுக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கடுகு எண்ணையுடன் கலந்து காய்ச்சி தடவினால் இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவையிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்துடன் திப்பிலி, சுக்கு, மிளகு திப்பிலி வேர், சீரகம், ஏலம், வாய் விடங்கம் மற்றும் கடுக்காய் இவைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு பொடி செய்துகொண்டு அத்துடன் சர்க்கரை பாகு காய்ச்சி அதில் தேன் கலந்து சிறிய அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நாவறட்சி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடியோடு நீங்கும்.
மாதவிலக்கு நோய் நீங்க மற்றும் கூந்தல் செழித்து வளர உதவும் கற்றாழை …
கற்றாழை உடலைத் தேற்றி உரமாக்குவதுடன் பெண்களுக்கு மாதவிலக்கு, சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகிறது. உடம்பில் அடிபட்ட வீக்கங்கள் இருப்பின் இதன் சாற்றை சூடு செய்து பூசலாம். கற்றாழைச் சோற்றை எடுத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டிய பின்னர் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று கூந்தல் நன்கு செழிப்புடன் வளரும். கற்றாழைச் சாற்றுடன் சிறிது அபினீ கலந்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும்.
வயிற்றுப் பூச்சி ஒழிக்க ஆடாதொடை ..
ஆடாதொடை இலை 8 முதல் 10 வரை எடுத்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். சிறிது தேன் கூட்டி பாத்திரத்தில் வைத்து சுட வைக்கவும் மணம் வந்தவுடன் நசுக்கிய அதிமதுரம் 2 கிராம், திப்பிலி 1 கிராம், தாளிசபத்திரி அரை கிராம், சித்திரத்தை கால் கிராம் போன்றவற்றை இட்டு 2 லிட்டர் தண்ணீரை அதில் கலந்து கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை இரண்டு முறை குடித்தால் வாயு, பித்தப்பிரச்சனைகள் நீங்கும். வாத தோஷம், வயிற்று நோய், வாந்தி, விக்கல், சூலை, அண்ட வாயு இவைகளை போக்கும். வயிற்றுப்பூச்சிகள் தொல்லை இருந்தால் ஆடாதொடை இலையுடன் தூதுவளை, கண்டக்கத்திரி இவைகளின் இலைகளை சேர்த்து மேற்கண்ட முறைப்படி கஷாயம் செய்து கொடுக்கலாம்.
நெஞ்சு எரிச்சலை நீக்கும் இம்பூறல் மூலிகை …
இந்த இலை வேருடன் 20 பங்கு வரை தண்ணீர் சேர்ந்து குடி நீரிட்டு நச்சுப் பாம்புக்கடி, மிருகங்களின் கடி போன்றவற்றால் உண்டாகும் புண்களை கழுவப் பயன்படுத்தலாம். இருமல், இரைப்பு, இளைப்புக்கு 30 மில்லி முதல் 60 மில்லி வரை உள்மருந்தாய் அருந்தலாம். இதன் இலையை இடித்து பிழிந்து சாறு எடுத்து பாலும் சர்க்கரையும் சேர்த்து அருந்தினால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். இலையை நிழலில் உலர்த்தி நன்றாகப் பொடித்து அரிசி மாவுடன் சேர்த்துக் களியாக்கி கிண்டிச் சாப்பிட்டால் ஆஸ்துமா நோய்க்கு நல்ல பலன் கிடைக்கும்.
பசியைத் தூண்டும் இலவங்க மூலிகை
இலவங்கம் (கிராம்பு) அன்றாடம் சமையலுக்குப் பயன்படுவது. இது சமையலுக்கு சுவை ஊட்டுவதோடு மணமும் தருகிறது. இந்த செடியின் மலராத மொட்டுக்களைப் பறித்து உலர்த்தினால் வருவதே கிராம்பு என்ற இலவங்கம். இலவங்கத்திற்கு வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி பசியைத் தூண்டக்கூடிய சக்தி அதிகம் உண்டு.
கர்ப்பிணிகளின் ரத்தப்போக்கை நீக்கும் அதிமதுரம்
கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் ரத்தப்போக்கு நிற்பதற்கு அதிமதுர வேரையும், சீரகத்தையும் 15 கிராம் அளவில் சமமாக எடுத்து, 350 மில்லி தண்ணீரை எட்டில் ஒன்றாக வற்றக் காய்ச்சி இருவேளை 3 அல்லது 4 நாட்கள் அருந்தி வந்தால் ரத்தப்போக்கு நிற்கும்.
மார்புச் சளியை நீக்கும் தூதுவளை
தூதுவளை இலையினால் நெஞ்சில் உள்ள சளி நீங்கும். பூவினால் ஆண்மை பெருகும். காய், வாதம், பித்தத்தை போக்கும். பழம் நீண்ட நாட்கள் மார்புக்குள் தங்கி இருந்து கெட்டியாக இறுகிப்போன சளியைப் போக்கும்.
இதுபோன்ற பலவகையான கை மருத்துவ முறைகளை சித்தமருத்துவம் தெளிவாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பிரச்சனைகளை மறைவின்றி எடுத்து சென்றால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவம் ஒரு நிலையை அடைந்து விட்டது. எந்த வித எதிர் விளைவுகளும் இல்லாத சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகெங்கும் பரவ அரசு வழிவகுக்க வேண்டும். அத்துடன் அபூர்வமான மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்திய மருத்துவம் உலகிலேயே அனைத்து மருத்துவ முறைகளிலேயே சிறப்பானது என உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை விரைவில் வருவது நிச்சயம். இந்திய மருத்துவம் பற்றிய சிறப்பை அரசு தன் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்.
மருத்துவர் (திருமதி) இஸட். செய்யது சுல்தான் பீவி. பி.எஸ்.எம்.எஸ்.